புதுக்கோட்டை நகராட்சியில் நிலவிவரும் குடிதண்ணீர் பிரச்சனை சம்பந்தமாக இன்று புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா MBBS அவர்கள் நகரக் கழகச் செயலாளர் திரு செந்தில் அவர்கள் நகர்மன்றத் துணைத் தலைவர் திரு லியாக்கத் அலி அவர்களின் தலைமையில் புதுக்கோட்டை நகர்மன்ற அலுவலகத்தில் நகராட்சியில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க வழிவகை செய்ய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.


இந்நிகழ்வில் குடிநீர் வழங்கல் வாரியம் திருச்சிகோட்ட கண்காணிப்பு பொறியாளர் SE அவர்களும், நிர்வாக பொறியாளர் EE, மற்றும் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர் ME, மற்றும் புதுக்கோட்டை குடிநீர் வளங்கள் வாரிய அதிகாரிகள் நகர் மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.