மதுபான கடைக்கு 9 ஆம் தேதி விடுமுறை

142

நபிகள் நாயகம் பிறந்தநாளினை முன்னிட்டு 09.10.2022 அன்று

டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக்கடை மற்றும் மதுபானக் கூடங்களில் மது விற்பனை செய்யக்கூடாது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்)

விதிகள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துணை விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு 09.10.2022 (ஞாயிறு) அன்று நபிகள் நாயகம் பிறந்தநாளினை முன்னிட்டு அன்றைய தினம் டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக்கடை மற்றும் மதுபானக் கூடங்களில், அனைத்து FL1/FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL11 உரிம கடைகள், பார்கள், ஆகியவற்றுக்கு விடுமுறை அளித்து, மது விற்பனை செய்யகூடாது.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக்கடை மற்றும் மதுபானக் கூடங்களில், அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மதுபானக்கூடங்கள்(பார்) மற்றும் FL1 / FL2 / FL3A / FL3AA / FL11 மற்றும் FL3 ஹோட்டல் பார்கள் ஆகியவற்றுக்கு மேற்கண்ட 09.10.2022 (ஞாயிறு) அன்று நபிகள் நாயகம் பிறந்தநாளினை முன்னிட்டு அன்றைய தினம் விடுமுறை என்பதால் மது விற்பனை ஏதும் நடைபெறாது என திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர்