புதுக்கோட்டை நகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு எம்எல்ஏ முத்துராஜா அடிக்கல் நாட்டினார்

691

இரண்டு அங்காடி (ரேஷன்) கடைகள் உள்ளிட்ட ரூ 35 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு எம்எல்ஏ முத்துராஜா அடிக்கல் நாட்டினார்

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட வண்டிப்பேட்டை மற்றும் சேங்கைதோப்பு 2 ரேஷன் கடைகள் உள்ளிட்ட 35 லட்சம் ரூ மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு எம்எல்ஏ முத்துராஜா அடிக்கல் நாட்டினார்

இன்று புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வார்டு எண் 1 ல் பசும்பொன் நகர் பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மினி டேங்க் அமைக்கும் பணி.

வார்டு எண் 10 ல் வண்டிப்பேட்டை பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்கும் பணி,வார்டு எண் 30 காமராஐபுரம்30 ஆம் வீதிக்கு ஆழ்துளை கிணறு அமைத்தல்.

வார்டு எண் 41ல் சேங்கை தோப்பு பகுதியில் ரேஷன் கடை அமைக்கும் பணி, வார்டு எண் 39 ல் அன்னச்சத்திரம் பகுதியில் ரேஷன் கடை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து அப்பகுதியில் பணியை துவங்கி வைத்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை.முத்துராஜா அவர்கள் இந்நிகழ்வில் நகர்மன்றத் தலைவர் திருமதி திலகவதி செந்தில் துணைத் தலைவர் திரு லியாக்கத் மாவட்ட துணைத் தலைவர் திருமதி ராஜேஸ்வரி இளைஞரணி அமைப்பாளர் திரு சண்முகம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மாநில மாவட்ட நகர கழக ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்