தெலுங்கானா முதல்வருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு…என்னவா இருக்கும்!

501

ஐதராபாத் : நடிகர் விஜய் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்தார்.தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். நடிப்பு ஒருப்பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அரசியலிலும் அவ்வப்போது தலையை காட்டுகிறார் விஜய். சில காலமாகவே விஜய் தன்னுடைய பட பாடல் வெளியீட்டு விழாவின்போது குட்டி கதை சொல்வது, அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசுவது என்று ரசிகர்களை பரபரப்பாக்கி வருகிறார். பீஸ்ட் படம் வெளியானதை அடுத்து நடிகர் விஜய் தனது அடுத்த படத்திற்கு தயராகி வருகிறார். ஏற்கனவே தளபதி 66 திரைப்படத்தின் சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இல்லாத இப்படத்தில் பெருமாளும் சென்டிமெண்ட் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

பீஸ்ட் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். முதலில் திரையரங்குகளில் ரிலீஸான இந்த திரைப்படம், இப்போது நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி தளங்களிலும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

சென்டிமென்ட் அடுத்ததாக விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். குடும்ப சென்டிமென்ட் கதைக்களத்தை கொண்ட இப்படத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் நடிக்க உள்ளனர். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். மேலும், சரத்குமார், பிரபு, ஷாம், சங்கீதா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தளபதி 66 தமன் இசையமைக்க உள்ளார். விஜய்யின் தீவிர ரசிகரான தமன் முதல்முறையாக அவரது படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதனால் இப்படத்தின் பாடல்கள் வேற லெவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகயுள்ளது. இதில் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

முன்னதாக இந்தாண்டு தொடக்கத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை தன்னுடைய நீலாம்பூர் இல்லத்தில் நடிகர் விஜய் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், தளபதி விஜய் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ், விஜய்க்கு சால்வை அணிவித்து வீணை ஒன்றை நினைவு பரிசாக அளித்தார். இந்த சந்திப்பின் போது, ராஜ்யசபா உறுப்பினர் ஜோகினா பள்ளி சந்தோஷ் குமார் உடனிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது, இந்த திடீர் சந்திப்புக்கு காரணம் என்னவா இருக்கும் என்றும் ரசிகர்கள் மூளையை கசச்சிவருகின்றனர்.