பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா 2022.

953

பேராவூரணி ஸ்ரீ நீலகண்ட மூர்த்தி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி பெருந்திருவிழா

07.04.2022 வியாழன்

கொடியேற்றத்துடன் காப்புக்கட்டுதல்

15.04.2022 வெள்ளி

பால்குடம் காவடி தேரோட்டம்

16.04.2022 சனி

தீர்த்தம்

17.04.2022 ஞாயிறு

தெப்பம்

ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் தீராத நோய்களை தீர்த்து வைக்கும் பிள்ளையாராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தஞ்சை ஆண்டு வந்த துளசேந்திர மகாராஜாவின் (மராட்டியமன்னன்) அமைச்சருக்கு தீராத நீரிழிவு நோய் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற திருப்பெருந்துறை ( ஆவுடையார்கோயில்) செல்ல பேராவூரணி வழியாக தனது அரசு பரிவாரங்களுடன் வந்தார்.

இவ்விடம் வந்தபோது இரவு நேரமாகி விட்டப்படியால் சாலை ஓரத்திலிருந்த அரசமரத்தடியில் தனது பரிவாரங்களுடன் தங்கினார். அப்போது பேராவூரணி -ஏந்தல் என்னும் இப்பகுதியின் திருக்குளக்கரையில் சிறிய கூரைக்கொட்டகையில் பிட வீற்றிருந்த ஸ்ரீ பிள்ளையாருக்கு சங்கரன் இருவர் பூஜை செய்வதையும், சுவாமியை தரிசனம் செய்வதற்கு கூடியிருந்த பக்தர்களையும் கண்டார்.

அப்போது அதனை விசாரித்த துளசேந்திர மகாராஜாவின் அமைச்சர் தனக்கு இருந்துவந்த தீராத நீரிழிவு நோய் பற்றி சங்கரன்களிடம்

தெரிவிக்க, சங்கரன்களும் பிள்ளையாரை வேண்டி,

திருநீறு கொடுத்து திருநீறு அணிந்து திருப்பெருந்துறை செல்லுங்கள். நோய் பூரணமாக குணமாகிவிடும் எனக் கூறியுள்ளார்கள்.

அதேபோல் அன்று இரவு தங்கி அதிகாலை எழுந்து திருக்குளத்தின் நீராடிநீலகண்டப்பிள்ளையாரை வணங்கி திருநீறு அணிந்தவுடனேயே தீராத நீரிழிவு நோய் குணமடைந்து விட்டது கண்டு அமைச்சரும் உடன் வந்த சகபரிவார வீரர்களும் ஆச்சரியப்பட்டார்கள். தனது அமைச்சருக்கு நீண்டகாலமாக இருந்து வந்த தீராத நீரிழிவு நோய்குணமாகியதால்,

திருக்கோயிலுக்கு அருகாமையிலிருந்த நிலத்தினை தானமாக திருநீலகண்டப்பிள்ளையாருக்கு எழுதிக் கொடுத்தார் மகாராஜா பின்னர் ஒரு நாள் திருநீலகண்டப்பிள்ளையார் துளசேந்திர மகாராஜாவின் கனவில்தோன்றி தனக்கு பூந்தோட்டம் பழுத்தோட்டம் வேண்டும் எனக் கேட்டதாகவும் அதற்கு பேராவூரணி இரயில் நிலையத்திற்கு அருகாமையிலிருந்த செங்கொல்லை எனப்படும்.

செம்மண் நிலத்தினையும், மேலும் எழுதிக் கொடுத்தலும், சிறிய கூரைக் கொட்டகையிலிருந்து வந்த திருநீலகண்டப்பிள்ளையாருக்கு திருக்கோயில் அமைத்து சுவாமி பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது,