புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது ஜல்லிக்கட்டு வன்னியன் விடுதியில் இன்று துவங்கியது
அமைச்சர்கள் ரகுபதி மகேஷ் பொய்யாமொழி மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
தமிழகம் ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் குறைந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதி அளிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது
முன்னதாக தமிழக அமைச்சர்கள் ரகுபதி மெய்யநாதன் மகேஷ் பொய்யாமொழி கலெக்டர் கவிதா ராமு ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர் பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்