வீட்டுவசதி வாரியம்

1761

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு இல்லாத ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, Kavitha Ramu இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் திருச்சிராப்பள்ளி கோட்டம், புதுக்கோட்டை வசதி மாவட்டத்திற்குப்பட்ட 2 நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளில் எழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 2924 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றது.

இந்த குடியிருப்புகளுக்கு நீர்நிலை மற்றும் ஆட்சேபகரமான புறம்போக்கு பகுதிகளில் வசித்து வரும் ஆக்கிரமிப்பு தாரர்களை மறு குடியமர்வு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். நகர்ப்புற வீடற்ற ஏழைகளுக்கும் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கும் முன்னுரிமை அளித்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கப்பட உள்ளது.

மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பு தொகை போக மீதம் உள்ள ரூ1லட்சத்தை பயனாளிகள் பங்களிப்புத் தொகையாக வழங்க வேண்டும்.தகுதியானவர்கள் தங்கள் பெயரிலோ, குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறெங்கும் வீடுகள் இல்லை எனவும், மாத வருமானம் ரூ.25,000/- க்குள் தான் என்பதற்கு சான்று அளிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் உதவி பொறியாளர் மற்றும் உதவி நிர்வாகப்பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், புதுக்கோட்டை அலுவலகம் (கவிநாடு மேற்கு திட்டப்பகுதி மவுண்ட் சியோன் பள்ளி செல்லும் வழி, இரயில்வே நிலையம் அருகில்) என்ற முகவரியிலும், நிர்வாகப்பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், திருச்சிராப்பள்ளி கோட்ட அலுவலகம் (பாலக்கரை பஸ் ஸ்டாப் அருகில், திருச்சிராப்பள்ளி) என்ற முகவரியிலும் மற்றும் அந்தந்த திட்டப்பகுதியிலும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் உதவிப்பொறியாளர் அலைபேசி எண் 9790382387, தொழில்நுட்ப உதவியாளர்கள் அலைபேசி எண் 9159500840,8973026147 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு – செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், புதுக்கோட்டை.