விரைவு சாலை vs நெடுஞ்சாலைகள் (Express way vs Highway)

848


Express way என்பது நமது நான்கு வழி சாலையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விஷயம்.

இந்த விரைவு சாலையில் இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனம் போன்றவைக்கு அனுமதி இல்லை. நான்கு சக்கர மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனம் மட்டுமே அனுமதி.

மேலும் இந்த சாலையில் பயன்படுத்திய தூரத்துக்கு சுங்க கட்டணம் செலுத்தினால் போதுமான ஒன்று. இதை இன்னும் விளக்கமாக பார்போம்.

நம் நான்கு வழி சாலையில் உள்ள சுங்க சாவடியில் குறிப்பிட்ட தொகை ரூபாய் 60 என எடுத்து கொள்வோம். இந்த கட்டணம் ஆனது சாலையின் மொத்த தூரத்தை வைத்து கணக்கிடப்படும். உதாரணம் ஆக, நம் சோழபுரம் – தஞ்சாவூர் இடையே உள்ள 48 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூபாய் 60 கட்டணம் என நிர்ணயம் செய்வார்கள். இதை நீங்கள் சோழபுரம் பகுதியில் இருந்து பயன்படுத்தினால் அதே 60 கட்டணம் தான். அதையே பாபநாசம் பகுதியில் இருந்து சாலையை பயன்படுத்த தொடங்கினாலும் இதே 60 ரூபாய் கட்டணம். இந்த முறைக்கு open Toll system என்று பெயர். இது போல உள்ள நான்கு வழி சாலைகளை அருகில் உள்ள ஊராட்சிகளில் இருந்து எங்கு வேண்டுமானாலும் அணுகலாம்.

ஆனால் விரைவு சாலையில் ( Express way) குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே அணுகு சாலை அமைக்கப்படும். உதாரணமாக: தஞ்சாவூர் – சென்னை இடையே விரைவு சாலை அமைந்தால் கும்பகோணம், வடலூர் , விக்கிரவாண்டி மற்றும் செங்கல்பட்டு போன்ற இடங்களில் மட்டுமே இந்த விரைவு சாலையில் வாகனம் நுழைய முடியும். வேறு எங்கும் இந்த சாலை உள்ளே வாகனம் நுழைய முடியாது. இந்த முறைக்கு பெயர் close toll system or Access controlled.

இந்த முறையில் விரைவு சாலைகளில் இருக்கிற அனைத்து நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் மட்டும் சுங்க சாவடி இருக்கும். கும்பகோணம் பகுதியில் உள்ள நுழையும் போது ஒரு சீட்டு மாதிரி வாங்கி விட்டு இந்த சாலையில் பயணிக்க தொடங்கினால் வடலூர் பகுதியில் நாம் வெளியேறும் போது பயன்படுத்திய தொலைவுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விரைவு சாலையில் இரு சக்கர வாகனம் குறுக்கீடு மற்றும் தேவை இல்லாத நுழைவு வாயில்கள் இருக்காது. அதனால் ஏற்படும் விபத்துகள் குறைவு.

இது தான் நான்கு வழி நெடுஞ்சாலை மற்றும் விரைவு சாலைக்கும் உள்ள பெரிய வித்தியாசம். நம் பகுதிக்கு விரைவு சாலை வரும் வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றாலும், சிலர் விரைவு சாலை மற்றும் நெடுஞ்சாலை இடையே குழப்பி கொள்வதால் இந்த பதிவு.