விரிவாக்கம் அடைகிறது மன்னார்குடி நகராட்சி

1311

மன்னார்குடி நகர் எல்லை விரிவாக்கம்.

மன்னார்குடி நகருக்கு விரிவாக்கம் செய்யப்படுவதாக ஆகஸ்ட் 24,2021 ஆம் ஆண்டு அறிவித்தார்கள்.

மேலும் மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் அவர்களும் 33 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு விரிவாக்கம் செய்ய உள்ளதாக Twitter பகுதியில் பதில் அளித்து இருந்தார். அதன் அடிப்படையில் நகர் எல்லை எப்படி இருக்கும் என்று கீழ் உள்ள படத்தில் இணைத்துள்ளேன்.

அதில் சில பெரிய ஊராட்சிகள் இரண்டாக உடைக்கபட வாய்ப்பு உள்ளது. அதனால் 33 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு சுமார் 80,000 மக்கள் தொகை மேல் இருப்பார்கள்.

மன்னார்குடி நகர் வளர்ச்சி பின் தங்கிய நிலையில் உள்ளதற்கு பல காரணம் சொல்லப்பட்டாலும், சரியான சாலை வசதி இல்லாமல் போனது தான் முக்கிய காரணம். கும்பகோணத்தில் சாலை கட்டமைப்பு தான் அதன் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருந்துள்ளது.

அது போல தற்போது நடைபெற்று வரும் கும்பகோணம் – நீடாமங்கலம் சாலை மன்னார்குடி வழியாக கிழக்கு கடற்கரை சாலைக்கு நீடிக்கபட்டால் மன்னார்குடி பகுதிக்கு நல்ல வளர்ச்சி இருக்கும்.

நகர் விரிவாக்கம் மூலம் வருவாய் எந்த அளவிற்கு பெருகும் என்று தெரியவில்லை.

மன்னார்குடி நகராட்சி ஆண்டு வருவாய்:

2017 -18: 9.09 கோடி
2018 -19: 10.22 கோடி
2019 -20 : 11.52 கோடி
2020 – 21: 7.29 கோடி ( கொரோனா கால கட்டத்தில்).

சிறப்பு நிலை நகராட்சிக்கு டெல்டாவில் பயங்கர போட்டி இருக்கும் என்று போல தான் தெரிகிறது.

01.11.1866 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மன்னார்குடி நகராட்சி 1986 ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சி ஆக தரம் உயர்த்தப்பட்டு பின்பு 2008 ல் தான் தேர்வு நிலை தகுதி பெற்றது.

சிறப்பு நிலைக்கு போட்டி இருந்தாலும் 2 நகரம் மட்டுமே தகுதி அடையும். அது என்ன என்று முடிவாகிறது என்று 2024 ஆம் ஆண்டு தெரிந்து விடும்.