விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருக பெருமான் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கடந்த 24-ந் தேதியன்று முருக பெருமான், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று மூலவர் சன்னதிக்கு முன்பு உள்ள கொடிமரத்தில் காப்பு கட்டப்பட்டது.
விராலிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக தேரோட்டம் பக்தர்கள் சூழ வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சுமார் 10000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
#விராலிமலை #தேர்_திருவிழா