விக்கிரவாண்டி – தஞ்சாவூர் திட்டத்தில் திருப்பனந்தாள் புறவழி சாலை.

1618

விக்கிரவாண்டி – தஞ்சை இடையே நான்கு வழி சாலை பணிகள் மூன்று கட்டங்கள் ஆக நடந்து வருகிறது. அவை முறையே 1. விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு 2. சேத்தியாத்தோப்பு – சோழபுரம் 3. சோழபுரம் – தஞ்சை என மூன்று பகுதிகள் ஆக நடந்து வருகிறது.


அதில் சோழபுரம் – சேத்தியாத்தோப்பு இடையே நடந்து வரும் நான்கு வழி சாலை பணியில் மூன்று இடங்களில் புறவழி சாலை வருகிறது.

1. திருப்பனந்தாள் புறவழி சாலை
2. அனைக்கரை புறவழி சாலை
3. சேத்தியாத்தோப்பு புறவழி சாலை

இதில் திருப்பனந்தாள் புறவழி சாலை பணிகள் பற்றி தற்போது பார்ப்போம்.திருப்பனந்தாள் புறவழி சாலையில் நுழையும் போது உள்ள உயர்மட்ட பாலத்தில் இன்னும் ஒரு பக்கம் பில்லர் பணிகள் துவங்கவில்லை. என்ன காரணம் என்று இது வரை தெரியவில்லை.

அடுத்த இந்த உயர்மட்ட பாலம் முதல் மண்ணியார் பாலம் வரை இன்னும் பணிகள் துவங்கவில்லை. பால வேலைகள் முடிந்த உடன் இங்கு எர்த் work பணிகள் துவங்கும்.

மண்ணியார் பால பணிகள் “Tbeam” முறையில் சாதாரண முறையில் தான் நடைபெற்று வருகிறது. இதே முறையில் தான் அரசு கல்லூரி அருகில் உள்ள பழவார் பால பணிகள் நடந்து முடிந்தது. மண்ணியார் பால பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.அடுத்த அருகில் உள்ள கிராமம் மக்கள் திருப்பனந்தாள் நகர் பகுதிக்கு சென்று வர ஒரு underpass அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த underpass அமைப்பில் இருந்து திருப்பனந்தாள் புறவழி சாலை முடியும் வரை சாலை பணிகள் முடிந்து உள்ளது. இதில் உள்ள சென்டர் மீடியன் அமைப்பில் இரவில் மது அருந்தி விட்டு சென்டர் மீடியன் பகுதியை குப்பை பகுதியாக மாற்றி வைத்துள்ளனர்.திருப்பனந்தாள் புறவழி சாலை முடியும் இடத்தில் உள்ள உயர்மட்ட பாலத்தில் இன்னும் அணுகு சாலை இருபுறமும் மீதம் உள்ளது.