சதிராட்டக் கலைஞர். முத்துக்கண்ணம்மாள்,84 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிர மணியசாமி கோவிலில் உள்ள முத்துக்கண்ணம்மாள்,84 தமிழகத்தின் கடைசி தேவதாசி. சதிர் நாட்டியக் கலைஞர்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவரடியார்களில் ஒருவராக இருந்தார்.
தன், 7 வயதில், தந்தை ராமச்சந்திரனிடம் சதிர் நடனம் கற்ற முத்துக்கண்ணம்மாள் மட்டும், ஆடிய பாதத்தையும், பாடிய வாயையும் கட்டிப்போட விரும்பாமல், தன் இறைவனான முருகனுக்காக தினமும் 400 படிகள் ஏறி பாடி ஆடியவர். தற்போது, திருவிழா காலத்தில் மட்டும் ஆடுகிறார்.
தன்னிடம் விரும்பி கேட்போருக்கு பாடவும், ஆடவும் சொல்லித் தருகிறார். கடந்த 75 ஆண்டுகளாக, தன்னை கலைக்காக அர்ப்பணித்த முத்துக்கண்ணம்மாளின் கலை சேவையை அங்கீகரக்கும் வகையில், மத்திய அரசு, இந்தாண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.
“முத்துகண்ணம்மாளுக்கு பத்ம ஸ்ரீ விருது கிடைத்திருப்பது எங்கள் மண்ணிற்கு பெருமை” – சி. விஜயபாஸ்கர்
2022 பத்ம விருது பெறும் தமிழர்கள் விவரம்.
பத்ம_பூஷண் விருது பெறுவோர்
- நடராஜன் சந்திரசேகரன்,
தலைவர், டாடா சன்ஸ் குழுமம், மும்பை
2 . சுந்தர் பிச்சை,
தலைமை செயல் இயக்குநர், கூகுள், அமெரிக்கா.
பத்மஸ்ரீ விருது பெறுவோர்
- பேரா. சிற்பி பாலசுப்பிரமணியம்
கவிஞர், எழுத்தாளர், பொள்ளாச்சி - எஸ்.பல்லேஷ் பஜந்திரி
ஷெனாய் இசைக் கலைஞர், சென்னை - எஸ்.தாமோதரன்
சமூக சேவகர், திருச்சி - சௌகார் ஜானகி
முதுபெரும் நடிகை, சென்னை
5.ஆர்.முத்துகண்ணம்மாள்
சதிர் நடனக் கலைஞர்,புதுக்கோட்டை
- ஏ.கே.சி.நடராஜன்
கிளாரினெட் இசைக் கலைஞர், திருச்சி - டாக்டர் வீராசாமி சேஷையா
மருத்துவர், சென்னை - தவில் கொங்கம்பட்டு ஏ. வி. முருகையன்
இசைக் கலைஞர், புதுச்சேரி.