மீண்டும் மன்னார்குடி⇋மானாமதுரை வழி புதுக்கோட்டை ரயில்!

785

கீழ்க்கண்ட பயணிகள் இரயில்கள் மீண்டும் இயக்கவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

அவற்றில் (விருதுநகர் – திருச்சி)காரைக்குடி – திருச்சிராப்பள்ளி ரயில் இயக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மன்னார்குடி – மானாமதுரை இரயில் மீண்டும் இயக்கப்படயிருக்கிறது.

#புதுக்கோட்டை வழியாக மீண்டும் வண்டி எண்-76805/06/07/08 மன்னார்குடி-திருச்சி-மானாமதுரை டெமு ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டு ரயில் எண்களுடன் இயங்கினாலும் இது ஒரே பெட்டிகளுடன் தொடர்ந்து இயங்கும் ரயிலாகும். விரைவில் இந்த ரயிலுக்கான அட்டவணை இயக்க தேதி உள்ளிட்டவை அறிவிக்கப்படும்.

குறிப்பு: கொரோனா பரவல் காரணமாக இந்த ரயில் ஏறக்குறைய 2 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.