மனிதநேயமிக்க சட்டமன்ற உறுப்பினர்

1154

ஒரத்தநாட்டில் இருந்து புதுக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த சகோதர சகோதரிகள் மூக்கம்பட்டி சாலையில் உள்ள பாலத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டனர் அவ்வழியாக சென்ற புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை.முத்துராஜா கண்ட அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தவர்களை கண்டவுடன்

உடனடியாக தான் சென்ற வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களுக்கு தேவையான முதலுதவி செய்து 108 ஆம்புலன்சை உடனடியாக வரவழைத்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உடனடி தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய மருத்துவமனை முதல்வருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய இருவரையும் ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார்.