போக்குவரத்து போலீசாரை குளிர்ச்சிப்படுத்த பழரசம்

622

புதுக்கோட்டை: புதுக்கோட்டை போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் வெயிலால் சோர்வடையாமல் இருக்க அவர்களுக்கு பழரசம் கொடுக்கும் திட்டத்தை எஸ்பி.நிஷாபார்த்திபன் துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை போக்குவரத்து பிரிவு போலீசார் மற்றும் போலீசார் நகரில் எட்டு சந்திப்புக்களில் போலீஸ் நிழற்குடை அமைத்து போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.கடந்த ஒரு வாரமாக கடும் வெயிலால் போக்குவரத்து சீரமைப்பு பணியில் உள்ள போலீசார் சோர்வு அடைந்துவிடுகின்றனர். அதனால் எஸ்பி.நிஷாபார்த்திபன், டிஎஸ்பி.லில்லி கிரேஸ் போக்குவரத்து பணியில் உள்ள போலீசாருக்கு குளிர்ச்சியான பழரசம் (ஜூஸ்) வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

புதிய பேருந்து நிலையம் பணியில் ஈடுபட்டுள்ள புதுக்கோட்டை போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்பி நிஷாபார்த்திபன் பழரச பானங்களை வழங்கி உற்சாகப் படுத்தினார் அருகில் டிஎஸ்பி லில்லி கிரேஸ் உள்ளிட்ட பலரும் உள்ளனர்

போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு பழரசம் வழங்கி துவக்கி வைத்தார். மற்ற சிக்னல்களில் பணியில் இருந்தபோலீசாருக்கு பழரசம் வழங்கப்பட்டது.கோடை காலம் வரை பழரசம் வழங்கப்பட உள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.