பொங்கல் பரிசு

326

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு மக்களின் தை திருநாளாம், பொங்கல் திருநாளில் மகிழ்ச்சியோடு பொங்கல் திருநாளை கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கமும் பொங்கல் தொகுப்பும் அறிவித்தார்.

அதனை புதுக்கோட்டையில் இன்று 09.01.22 மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு அவர்கள் தலைமையில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே கே செல்லபாண்டியன் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை நகர மன்ற தலைவர் திருமதி. திலகவதி செந்தில் அவர்கள் முன்னிலையில் புதுக்கோட்டை நகரம் 19 ஆவது வார்டு உட்பட்ட ரேஷன் கடையில் பயனாளிகளுக்கு 1000 ரூபாயும், பொங்கல் தொகுப்பும் வழங்கினார்கள்.

பின்பு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் கே கே செல்லப்பாண்டியன் அவர்களும், நகர்மன்ற தலைவர் திருமதி திலகவதி செந்தில் அவர்களும் 5,6,7,19,20,24,25,36,38 உள்ள ரேஷன் கடைகளில் அந்தந்த வட்டச் செயலாளர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் முன்னிலையில் அனைவருக்கும் ரூபாய் 1000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.