இந்த பணிகளில் புதுத்தெரு அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயில் குளம் ரூ 89 லட்சம் மதிப்பீட்டிலும் அரசு பால்பண்ணை அருகில் உள்ள வெங்கப்பர் ஊரணி குளம் ரூ 87 லட்சம் மதிப்பீட்டிலும் கீழ 4ஆம் வீதியில் நகர் நல மையம் கட்டும் பணி ரூ 25 லட்சம் மதிப்பீட்டிலும் கேஎல்கேஎஸ் நகர் போஸ் நகர் ஆகிய பகுதிகளில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் பணி 1.10 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஆணையர் நாகராஜ் நகர்மன்ற உறுப்பினர்கள் அறிவுடைநம்பி காந்திமதி பிரேம்ஆனந்த் காதர்கனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் ரூ 4 கோடி மதிப்பீட்டில் குளம்தூர்வாரும் பணி, புதிய கட்டிடங்கள், நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிக்கான பூமிபூஜை அமைச்சர் ரகுபதி தலைமையில், எம்எல்ஏ முத்துராஜா நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ 4 கோடி மதிப்பிலான குளங்களை தூர்வாரி கரைகளில் அழகுபடுத்தும் பணி, நகர் நல மையம் கட்டிடம் கட்டும் பணி, தரை நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் எம்எல்ஏ முத்துராஜா நகர்மன்ற உறுப்பினர் திலகவதி செந்தில் ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கும் வகையில் பூமிபூஜை விழா நடைபெற்றது