புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

787

இன்றைய புதுக்கோட்டை செய்திகள்

தேதி :19.04.2022

புதுக்கோட்டையில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை மறுசுழற்சி செய்வது தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம் அப்துல்லா புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திருமதி. திலகவதி செந்தில், திரு.செந்தில், மற்றும் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட #4வது வார்டில் #தார்சாலை அமைக்கும் பணி நடைப்பெற்று வருவதை ஆய்வு செய்தார் நகர்மன்ற தலைவர்.இந்நிகழ்வில் நகர்மன்ற துணை தலைவர் அவர்களும், நகர்மன்ற உறுப்பினர்களும் மற்றும் நகராட்சி அதிகாரிகளும் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை: ஆட்சியரகத்தில் போதைப்பொருள் தீங்கு குறித்து விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் 20.04.22 அன்று நடைபெறுகிறது

பொன்னமராவதி அருகே இன்று ஆர்.பாலகுறிச்சியில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டி
600க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் அடக்கினர்.

ஆவணம் பெரியநாயகிபுரம், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மது எடுப்பு, தேரோட்ட திருவிழா..