புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும்!!

703

புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும் வரும் காலத்தில் உட்கட்டமைப்பு
வசதிகள் மேம்படுத்தபடும் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ முத்துராஜா தலைமை வகித்தார்.

விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் கலெக்டர் கவிதா ராமு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் நகர செயலாளர் செந்தில் ஒன்றிய செயலாளர் கேவி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசியதாவது

கடந்த ஆட்சியில் அரசு தலைமை மருத்துவமனை விதிகளின்படி திறக்க முடியாது எனக்கூறினார்கள் ஆனால் இப்போது திறந்துள்ளோம் அதுவே எங்களுக்கு முதல் வெற்றி

ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் அரசு தலைமை மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது

மேலும் எதிர்காலத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்பதை வாக்குறுதியாக கூறுகிறேன்.

பல்வேறு அரசியல் கட்சிகள் மருத்துவமனை திறப்பதற்கு போராட்டம் நடத்தினாலும் முதல்வரும் திமுக அரசும் மருத்துவமனை திறந்து வைத்துள்ளார்கள் எனவே எல்லா புகழும் முதல்வரையே சேரும்

இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்