பொன்னமராவதி அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது..
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தொட் டியம்பட்டி ஊராட்சியில் உள்ள தாழ்ப்பா கண்மாயில் மீன்பிடி திரு விழா நேற்று நடைபெற்றது. பொன் னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடை காலத்தில் நீர் வற்றும் விவசாய கண் மாய்களில் ஜாதி, மதம் பாராமல் அனைத்து மக்களும் கலந்து கொள் ளக்கூடிய மீன்பிடித்திருவிழா நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் நடைபெறும்.
அதன்படி, இந்தாண்டும் பொன்னமராவதி பகுதிகளில் மீன்பிடி திரு விழா அமர்க்கலமாகு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி ஊராட்சியில் உள்ள தாழ்ப்பா கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் குவிந்தனர்.
இதையொட்டி காலை 6 மணியளவில் மிராஸ் ராஜா அம்பலகாரர் கண்மாய் கரையில் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி வெள்ளை துண்டை வீசினார். இதையடுத்து பொதுமக்கள் கண்மாயில் இறங்கி ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மீன் பிடித்தனர்.
இதில் ஜிலேபி, கட்லா, விரால், கெண்டை, அயிரை உள்ளிட்ட பலவகை மீன்கள் கிடைத்தன. இதில் பொன்னமராவதி ஒன்றிய பகுதிகளில் உள்ள தொட்டியம்பட்டி, ஏனாதி, பிடாரம்பட்டி, வேகுப்பட்டி, கட்டையாண்டிபட்டி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, ஆலவயல், அம்மன்குறிச்சி, செம்பூதி, கொன்னையூர், கொப்பனாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்து சென்றனர்.