புதுக்கோட்டை நகரில் நாளை மின்சாரம் இருக்காது:அதிகாரி

1027

புதுக்கோட்டை நகரில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சைய்யது அகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் புதுக்கோட்டை நகரில் சத்தியமூர்த்தி நகர், பியூ சின்னப்பா நகர், அசோக் நகர், கே எல் கே எஸ் நகர், திருநகர், சக்தி நகர், மேட்டுப்பட்டி, திருவப்பூர், கீழ ரெண்டு வடபுரம், பெருமாள் கோவில் மார்க்கெட்,மரக் கடைவீதி, காமராஜபுரம், போஸ் நகர், கணேஷ் நகர் ஆகிய இடங்களில் மட்டுமில்லாது. ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர் சிவகாமி
ஆச்சி நகர்,சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம் வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துபட்டி, நமணசமுத்திரம் கனக்கம்பட்டி அம்மையாபட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணா விளக்கு, எல்லை பட்டி, செல்லுகுடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் நாளை மார்ச் 12ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனவும் பொதுமக்கள் அதற்கு ஏற்றார் போல் தங்களுடைய பணிகளை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.