புதுக்கோட்டை நகராட்சியில் நாளை முதல் நகர்மன்ற கூட்டம் நடைபெறுகிறது.. அனைத்து உறுப்பினர்கள் பதவி ஏற்று நடக்கும் முதல் நகர்மன்ற கூட்டம் நாளை நடைபெறுகிறது.
புதுக்கோட்டை நகராட்சியில் கடந்த பல வருடங்களாக மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது. புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் பல வருடங்களாக செயல்பட்டு வந்த நகராட்சி கட்டிடம் பழுதடைந்து நகர மன்ற உறுப்பினர்களுக்கு போதிய வசதிகள் இல்லாமல் இருந்து வந்ததால் கடந்த 2014ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் 5 கோடி ரூபாய் மதிப்பில் நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சி திட்டத்தின் கீழ் புதிய நகராட்சி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
மேலும் சந்தைப்பேட்டை அருகே கட்டி முடிக்கப்பட்ட நகராட்சி கட்டிடம் மன்னர்கால அரண்மனையைப் போன்றே வடிவமைக்கப்பட்டது.நகராட்சி அலுவலகம் உள்ளே நகர்மன்ற கூட்டம் நடைபெறும் வளாகம் பல லட்ச ரூபாய் மதிப்பில் பர்னிச்சர்கள் போடப்பட்டு ராஜாக்கள் அமர்வது போல் நாற்காலிகள் அமைக்கப்பட்டது.
இந்த புதிய நகராட்சி அலுவலகத்தில் முதல் நகர் மன்ற தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஆர். ராஜசேகரன் செயல்பட்டார் அதன்பிறகு 2016 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தினால் நகர்மன்ற கட்டிடத்தில் பல்வேறு அரசு சார்ந்த கூட்டங்கள் நடைபெறுவதற்கு மட்டும் பயன்படுத்தபட்ட வந்தது.
நகர்மன்ற கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திருமதி.திலகவதி சேந்தில் அவர்கள் நகர்மன்ற கூட்டத்தில் கூட்டம் நடைபெறும் அறையை ஆய்வு செய்தார்..