புதுக்கோட்டை கபடி வீரர் உயிரிழப்பு

439

புதுக்கோட்டை கபடி வீரர் உயிரிழப்பு

கபடி விளையாட்டின் போது மைதானத்தில் மயங்கி விழுந்து கபடி வீரர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் பெருமநாடு மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சேர்ந்தவர் தங்கராஜ் இவரது மகன் யோகேஸ்வரன் (வயது-19).

கபடி அணி வீரரான இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில்,நேற்று இரவு அன்னவாசல் அருகே மாங்குடியில் நடைபெற்ற கபடி போட்டி நடந்தது இந்த போட்டியில் பெருமநாட்டை சேர்ந்த,யோகேஸ்வரன் (வயது-19). என்பவர் கலந்துகொண்டு விளையாட களத்தில்.நின்றபோது திடிரென எதிர்பாத விதமாக மயங்கி கீழே விழுந்தார் பின்னர் யோகேஸ்வரனை மீட்டு அன்னவாசல் அரசுமருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் யோகேஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.பின்னர், இது பற்றி தகவல் அறிந்ததும் அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யோகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மாங்குடியில் கபடி விளையாட்டின் போது வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது