புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளத்தி விடுதி குலதெய்வ கோயிலுக்கு கிடாவெட்டு பூஜைக்காக வருகை தந்த நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த சகோதரிகளான இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுமிகளின் உறவினரான இளைஞர் ஆகிய மூன்று பேரும் ஊரணி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது…
ஆலங்குடி அருகே 2 சிறுமிகள் உட்பட 3 பேர் பலி காப்பாற்ற சென்ற சித்தப்பாவும் நீரில் மூழ்கி இறந்த பரிதாபம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளத்து விடுதியில் குலதெய்வ கோயிலுக்கு கிடாவெட்டு பூஜைக்காக வருகை தந்த நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த சகோதரிகளான இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுமிகளின் உறவினரான இளைஞர் ஆகிய மூன்று பேரும் ஊரணி நீரில் மூழ்கி உயிரிழப்பு…
நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த், அவரது மனைவி விஜயலட்சுமி, இவர்களது மகள்களான பூமிகா, அக்ஷயா தனலட்சுமி, மற்றும் விஜயகாந்தின் சகோதரரான ஆனந்த்குமார் உட்பட ஆறு பேரும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்து விடுதி, தெற்குப்பட்டியில் உள்ள தங்களது குலதெய்வமான மயிலியாத்தம்மன் கோயில் கிடாய் வெட்டு பூஜைக்காக வந்துள்ளனர். அங்கு அப்பகுதி உள்ள விநாயகர் கோயில் மயிலி ஊரணியில் குளிப்பதற்காக விஜயகாந்தின் மகள்களான அக்ஷயா(15) மற்றும் தனலட்சுமி(18) இருவரும் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் குளத்தில் மூழ்கியுள்ளனர்.
இதைப் பார்த்த சிறுமிகளின் சித்தப்பா ஆனந்தகுமார்(29) இரண்டு சிறுமிகளையும் மீட்க முயன்றுள்ளார் அப்போது, மூவரும் குளத்தில் மூழ்கியுள்ளனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மூவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் தெற்கு பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதை எடுத்து உயிரிழந்த மூன்று பேரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.