தமிழகத்தை சேர்ந்த சதிராட்ட கலைஞர் முத்துக் கண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்

727

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த சதிராட்ட கலைஞர் முத்துக் கண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

பத்மஶ்ரீ விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள விராலிமலையைச் சார்ந்த சதிராட்ட கலைஞர் முத்துக்கண்ணம்மாள் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலை வழங்க வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வருக்கு, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் கோரிக்கை..

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி, விராலிமலை வடக்கு ஆசாரி தெருவை சார்ந்த முத்து கண்ணம்மாள் என்ற அம்மையார் சதிர் நடனத்தை முழுமையாக தெரிந்தவராவார். இவருக்கு 90 வயது நடைபெற்று வரும் நிலையில்,

மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதில் அவரது பெயரும் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், அம்மையார் முத்து கண்ணம்மாள் அவர்களை முன்னாள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் நேரில் சந்தித்து பட்டாடை அணிவித்து அன்பளிப்பு அளித்து வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விராலிமலையில் நடைபெற்றது, அப்பொழுது அம்மையாருக்கு பொற்கிழி மற்றும் உதவி தொகை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இது குறித்து மாண்புமிகு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில்,

பரதநாட்டியத்தின் ஆதிவடிவம் என அழைக்கப்படும் ‘சதிராட்டத்தின்’ அடையாளமாக வாழ்ந்து வரும் நம் விராலிமலையைச் சார்ந்த முத்துக்கண்ணம்மாள் அவர்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.

நம் விராலிமலையின் பெயரை, தமிழ்நாட்டின் அடையாளத்தை இந்திய அரங்கில் ஒலிக்கச் செய்த முத்துக்கண்ணம்மாள் அவர்கள் நம் மண்ணின் பெருமைமிகு அடையாளம்.

சமீபத்தில் ABP Nadu செய்திகளுக்கு அவருடைய மகள் அளித்த நேர்காணலில், ‘குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென’ அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

நிச்சயம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையினை வழங்கி நம் மண்ணின் அடையாளமான முத்துக்கண்ணம்மாள் அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிக்கை வைத்துள்ளார்.