நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா இன்று நடைபெற உள்ளது.

1722

இந்து சமய அறநிலையத்துறை புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சார்ந்த அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் நார்த்தாமலை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில் ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்வது நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா மற்றும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா இன்று (27-ந் தேதி) தொடங்குகிறது. இதையொட்டி புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல், இலுப்பூர், போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பூக்களை கொண்டு வந்து கோவிலில் கொட்டி வழிபடுகின்றனர். .

அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 3-ந் தேதி இரவு பங்குனி தேரோட்டம் காப்புகட்டுதலுடன் தொடங்க உள்ளது. இதைதொடர்ந்து செவ்வாய் தேதி 12.04.2022 மாலை 4 மணியளவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரனூர் போலீசார் செய்து வருகின்றனர்.