நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

874

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் நடத்தைவிதிகள் குறித்து,

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் எஸ்பி நிஷா பார்த்திபன் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது

தேர்தல் அமைதியாக நடக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது
2 லட்சத்து 48 ஆயிரம் 964 பேர் வாக்களிக்க உள்ளனர்
தேர்தல் விதி மீறல்கள் மற்றும் புகார்கள் ஏதும் வராத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும் தேர்தல் நடத்தை விதிகள் பற்றி கண்காணிக்க 30 பறக்கும் படையினர் அமைத்துள்ள இவ்வாறு கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்

தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு சிறப்பு பறக்கும் படை
அமைக்கப்படவுள்ளது, டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபான வாங்குபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்… புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவுடன் சேர்ந்து மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் பேட்டி.