பாபநாசம் நகராட்சி முதல் படி.
பாபநாசம் பேரூராட்சியை நகராட்சி ஆக தரம் உயர்த்த பரிசீலனை பேரூராட்சி மன்றம் எடுத்து கொண்டது.
பாபநாசம் பேரூராட்சி தேர்வு நிலை பேரூராட்சி ஆக உள்ளது. மேலும் பல அரசு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. போதிய புறநகர் இருந்தும் 2021 ஆம் ஆண்டு நகராட்சி ஆக தரம் உயர்த்தப்படவில்லை. மேலும் அப்போது கருத்துரு கூட அனுப்பவில்லை.
இப்போது பாபநாசம் பேரூராட்சி, ராஜகிரி, பண்டராவாடை, ரெகுநாதபுரம், கோபுராஜபுரம் மற்றும் திருவையாத்துக்குடி ஆகிய ஊராட்சிகள் இணைக்க பரிசீலனை செய்யபட்டு வருகிறது.
இதன் மூலம் மக்கள் தொகை: 40,059 மற்றும் பரப்பளவு: 29.74 சதுர கிலோ மீட்டர் கிடைக்கும்..
ஒரு பேரூராட்சி ஆனது நகராட்சி ஆக தரம் உயர 30,000 மக்கள் தொகை போதுமானது. இதற்கான விவரங்கள் படத்தில் இணைத்துள்ளேன்.
படம் 1: பாபநாசம் நகராட்சி பரிசீலனை குறித்து வந்த செய்தி
படம் 2: பாபநாசம் நகராட்சி மாதிரி வரைபடம்.
படம் 3: பாபநாசம் நகராட்சியில் இணைய உள்ள உத்தேச பகுதிகள் பட்டியல்
மேலும் இதே போல அய்யம்பேட்டை பேரூராட்சி, பசுபதி கோவில், சக்கரபள்ளி, வழுத்தூர் மற்றும் சரபோஜிராஜபுரம் ஆகிய பகுதிகளை இணைத்து எளிமையாக அய்யம்பேட்டை நகராட்சியும் எளிதாக உருவாக்கலாம். இப்படி செய்யும் போது மக்கள் தொகை: 39,373 ஆகவும் பரப்பளவு: 17.69 சதுர கிலோ மீட்டர் ஆகவும் இருக்கும். பாபநாசம் நகராட்சி போல அய்யம்பேட்டை நகராட்சியும் பரிசீலனை செய்ய வேண்டும்.
ஆடுதுறை வாசிகளுக்கு மகிழ்ச்சியான செய்து.
ஆடுதுறை – கும்பகோணம் – சென்னை இடையே புதிய அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து ( SETC) இன்று முதல் இயங்க உள்ளது, இதற்கான தொடக்க விழா இன்று மாலை 6.30 மணி அளவில் ஆடுதுறை பேருந்து நிலையத்தில் தொடங்க உள்ளது.