“தொன்மையான மாவட்டம் உருவாகிய நாள்”

815

இன்று புதுக்கோட்டை மாவட்டம் ( 14 – 01- 1974) உதயமான நாள். “Pudukkottai Day”.

மாட்சிமை தாங்கிய பிரகதாம்பாள் தாஸ் H.H தொண்டைமான் மன்னர்கள் புதிய கோட்டை கொத்தளங்களுடன் கூடிய புதிய நகரை நிர்மாணித்து அதற்கு “புதுக்கோட்டை ” என பெயரிட்டு 1686- 1948 வரை இன்றைய இந்தியாவை போன்று தனி நாணயம், தனி கொடி என தனி நாடாக கோலோச்சினர்.

அன்றைய இந்தியாவிலேயே முதன்முதலாக பேருந்துகள் , மகிழுந்து போன்றவை அறிமுகப்படுத்தியவர்கள் எங்களது மாட்சிமை தாங்கிய மாமன்னர்கள் தான்.

இன்றைய தமிழகத்திலேயே முதல் நூற்றாண்டு கண்ட நகராட்சியும் எங்களது புதுக்கோட்டை தான்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 3-3-1948 வரை தனி சமஸ்தானமாக கோலோச்சி வந்த எமது சமஸ்தானத்தை அன்றைய சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர் உயர்திரு.சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க அன்றைய கால கட்டத்தில் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மாட்சிமை தாங்கிய மாமன்னர் பிரகதாம்பாள் தாஸ் H.H இராஜகோபால தொண்டைமான் அவர்கள் இந்தியாவுடன் இணைத்திட இசைவு தெரிவித்தார்.

அதன்படி எண்ணிலடங்கா சொத்துக்களையும் அன்றைய சமஸ்தானம் கருவூலத்தில் இருந்த ₹72 இலட்சம் பணத்துடன் புதுக்கோட்டை சமஸ்தானத்தை 3- 3- 1948ம் ஆண்டு இந்தியாவுடன் இணைத்தார்.

இந்தியாவுடன் இணைக்கப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானம் அன்றைய சென்னை மாகாணத்தின் திருச்சி ஜில்லாவின் ஒரு வருவாய் கோட்டமாக இருந்து 14- 01- 1974ம் ஆண்டு தமிழகத்தின் 15-வது மாவட்டமாக “புதுக்கோட்டை “மாவட்டம் உதயமானது.

அன்றைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சமஸ்தானத்தின் புதிய அரண்மனையை புதிய மாவட்டத்தின் ஆட்சி தலைவர் அலுவலகம் அமைத்திட தமிழக அரசிடம் ஒப்படைத்தார் எங்களது மாமன்னர். இன்றைய இந்தியாவிலேயே அதிக நிலப்பரப்பில் (99.99 ஏக்கர்) அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரகம் எங்களது புதுக்கோட்டை மட்டும்தான்.

புதுக்கோட்டை சில செய்திகள்….

✔ஆசியாவிலேயே மிகப்பெரிய அனந்த சயண பெருமாள் – திருமெய்யர்

✔உலகில் உள்ள அனைத்து நீர்நிலைகளின் பாவங்களை போக்குவது திருமயம் சத்திய புஷ்கரணி

✔உலகிலேயே சிவன் மற்றும் பெருமாளை ஒருங்கே கிரிவலம் வரும் ஊர் – திருமயம்.

✔புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரே திவ்ய தேசம் – திருமயம்

✔இமயமலையை விட அதிக சக்தி வாய்ந்தது திருமயம் மலைக்கோட்டை

✔உலகிலேயே வடக்கு திசை பார்த்து தனி சன்னதியில் வீற்றிருக்கும் பைரவர் – திருமயம் கோட்டை பைரவர்

✔தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கோத்பவர் திருமயம் சத்தியகிரீஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் லிங்கோத்பவர்
( பெரிய நந்திக்கு பின்புறம்).

✔ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலை – புதுக்கோட்டை குலமங்களம் பெருங்கரையாடி மிண்ட அய்யனார் கோவில் குதிரை சிலை

✔தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சிவன் சிலை – புதுக்கோட்டை கீரமங்களம்

✔தமிழத்திலேயே ஏழு சகோதரிகளாக (சப்தகன்னியர்களாக) அழைக்கப்படும்

1). திருவப்பூர் முத்துமாரியம்மன்

2). இளஞ்சாவூர் முத்துமாரியம்மன்

3). கொன்னையூர் முத்துமாரியம்மன்

4). நார்த்தாமலை முத்துமாரியம்மன்

5). கீரணிப்பட்டி முத்துமாரியம்மன்

6). கண்ணணூர் முத்துமாரியம்மன்

7). சமயபுரம் முத்துமாரியம்மன்

ஆகிய ஏழு முத்துமாரியம்மன்களில் நான்கு சகோதரிகள்

(திருவப்பூர், இளஞ்சாவூர், கொன்னையூர், நார்த்தாமலை)

வீற்றிருப்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமே.

✔தமிழ் நாட்டிலேயே சமணர்கள் அதிகமாக தங்கிய குகைகளும் மலைகளும் நிறைந்த மாவட்டம் புதுக்கோட்டை. (சித்தன்னவாசல், நார்த்தாமலை, குடுமியான்மலை)

✔இராஜராஜ சோழன் பதவி ஏற்றவுடன் முதல் கோவில் கட்டியது புதுக்கோட்டை நார்த்தாமலை அருகில்.

✔தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் இருப்பது புதுக்கோட்டை

✔தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய அரசு அச்சகம் இருப்பது புதுக்கோட்டை.

✔தமிழகத்திலேயே நூற்றாண்டு கண்ட முதல் நகராட்சி புதுக்கோட்டை நகராட்சி.

✔💖ஹெலிகாப்டரில் புனித நீரும் பூக்களும் தூவி, அம்மன் கோவில் இராஜகோபுரம் கும்பாபிஷேகம் செய்தது கொத்தமங்கலம் கிராமம், ஆலங்குடி தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம்.💝

✔பாரி வள்ளல் பிறந்த பரம்பு மலை கொண்ட மாவட்டம்.

✔தனி நாணயம், தனி தபால் தலையுடன் விளங்கிய ஒரே சமஸ்தானம் புதுக்கோட்டை சமஸ்தானம்.

✔தஞ்சை பெரிய கோவிலின் முன்மாதிரி, விஜயாலய சோழீச்சுரம் சிவன் கோவிலும், கற்களும் எடுக்கப்பட்ட இடம் நார்த்தாமலை.

✔சேர சோழ பாண்டியர் குலத்தின் முன்காலத்தே தோன்றிய மூத்த குடிகளைக் கொண்ட மாவட்டம். கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி சொல்லும் தொன்மையின் வரலாற்றை. அனைத்தும் அருங்காட்சியக்த்தில் காட்சிக்கும் சாட்சிக்கும் உள்ளன.

✔இந்தியாவின் கடைசி சுதந்திர தனி நாடு.

✔முதன்முதலில் கார் வாங்கியது புதுக்கோட்டை மன்னர்.

✔இந்தியாவின் முதல் பெண்மருத்துவர் DR.முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த ஊர் புதுக்கோட்டை.

✔பாரீஸ் மற்றும் பாண்டிச்சேரி நகருக்கு அடுத்தபடியாக அழகான நகர அமைப்பையும் நேர் வீதிகளையும் கொண்ட ஊர் புதுக்கோட்டை.

ஆளுமை கம்பீரத்தின் அழகான அடையாளம் புதுக்கோட்டை சமஸ்தானம் மாவட்டமாக உதயமான நாள் 14 1 2022 இன்று

இன்று புதுக்கோட்டை மாவட்டம் ( 14 – 01- 1974) உதயமான நாள். “Pudukkottai Day”.

மாட்சிமை தாங்கிய பிரகதாம்பாள் தாஸ் H.H தொண்டைமான் மன்னர்கள் புதிய கோட்டை கொத்தளங்களுடன் கூடிய புதிய நகரை நிர்மாணித்து அதற்கு “புதுக்கோட்டை ” என பெயரிட்டு 1686- 1948 வரை இன்றைய இந்தியாவை போன்று தனி நாணயம், தனி கொடி என தனி நாடாக கோலோச்சினர்.

அன்றைய இந்தியாவிலேயே முதன்முதலாக பேருந்துகள் , மகிழுந்து போன்றவை அறிமுகப்படுத்தியவர்கள் எங்களது மாட்சிமை தாங்கிய மாமன்னர்கள் தான்.

இன்றைய தமிழகத்திலேயே முதல் நூற்றாண்டு கண்ட நகராட்சியும் எங்களது புதுக்கோட்டை தான்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 3-3-1948 வரை தனி சமஸ்தானமாக கோலோச்சி வந்த எமது சமஸ்தானத்தை அன்றைய சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர் உயர்திரு.சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க அன்றைய கால கட்டத்தில் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மாட்சிமை தாங்கிய மாமன்னர் பிரகதாம்பாள் தாஸ் H.H இராஜகோபால தொண்டைமான் அவர்கள் இந்தியாவுடன் இணைத்திட இசைவு தெரிவித்தார்.

அதன்படி எண்ணிலடங்கா சொத்துக்களையும் அன்றைய சமஸ்தானம் கருவூலத்தில் இருந்த ₹72 இலட்சம் பணத்துடன் புதுக்கோட்டை சமஸ்தானத்தை 3- 3- 1948ம் ஆண்டு இந்தியாவுடன் இணைத்தார்.

இந்தியாவுடன் இணைக்கப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானம் அன்றைய சென்னை மாகாணத்தின் திருச்சி ஜில்லாவின் ஒரு வருவாய் கோட்டமாக இருந்து 14- 01- 1974ம் ஆண்டு தமிழகத்தின் 15-வது மாவட்டமாக “புதுக்கோட்டை “மாவட்டம் உதயமானது.

அன்றைய தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு கலைஞர் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க சமஸ்தானத்தின் புதிய அரண்மனையை புதிய மாவட்டத்தின் ஆட்சி தலைவர் அலுவலகம் அமைத்திட தமிழக அரசிடம் ஒப்படைத்தார் எங்களது மாமன்னர். இன்றைய இந்தியாவிலேயே அதிக நிலப்பரப்பில் (99.99 ஏக்கர்) அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரகம் எங்களது புதுக்கோட்டை மட்டும்தான்.

இவ்வளவு பெருமை மிகுந்த எமது புதுக்கோட்டை மாவட்டம் உதயமான நாள்

இன்று நமது மாவட்டத்தின் பெருமையை மேலும் மெருகேற்ற உங்களின் ஆதரவுடன் நமது இனையதளம் இனிதே ஆரம்பம்😍 🙏🙏🙏❤

www.ilovepudukkottai.com

எனது மாவட்டத்தின் பெருமை எனது பெருமை.