நார்த்தாமலை முத்துமாரியம்மன்கோவில் பூச்சொரிதல் விழா 2022

1019

நார்த்தாமலை முத்துமாரியம்மன்கோவில் பூச்சொரிதல் விழா பக்தர்கள் பால்குடம் – அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற
கோவில்களில் ஒன்றான நார்த்தாமலை முத்துமாரியம்மன்கோவில் பூச்சொரிதலையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தியும் கரும்பு தொட்டில் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலையில் மிகவும் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பூசொரிதல் விழாவுடன் கூடிய பங்குனி தோரோட்டம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம்.

நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று காலை சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு S.ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.K.K.செல்லபாண்டியன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமிகு.கவிதா ராமு IAS, ஆகியோர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் இந்த ஆண்டும் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று பூச்சொரிதல் விழா

நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை கோவிலில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்புவழிபாடு நடைபெற்றன.

இதில் புதுக்கோட்டை, கீரனூர், இலுப்பூர்,
அன்னவாசல், மற்றும் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கடந்த சில நாட்களாக விரதம் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பால் குடம் எடுத்துவந்து,
முத்துமாரியம்மன்கோவில் சிறப்பு வழிபாடு நடத்தி நேர்த்திகடனை செலுத்தினர்.

இதே போல் திராளான பக்தர்கள் அலகு குத்தியும், தம்பதிகள் கரும்பில் தொட்டில் கட்டி தங்களது குழந்தையை கோவிலுக்கு மேள தாளங்கள் வாண வேடிக்கைகள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தும் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

சிறப்பு வாழிபாடு

நார்த்தாமலை முத்துமாரியம்மன்கோவில் பூச்சொரில் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை, கீரானூர், அன்னவாசல், இலுப்பூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு நேர்த்திகடன் செலுத்த ஊர்வலமாக வந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் தண்ணீர், மோர், உள்ளிட்டவை வழங்கப்பட்டது.



இதை தொடர்ந்து நேற்று இரவு சுற்றுவாட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பூக்களை முத்துமாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனின் பாதத்தில் கொட்டி வழிபட்டனர்.



விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை, சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர். விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசலில் இருந்து போக்குவரத்துத்துறை சார்பில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஏற்பாடுகளை கீரனூர் போலீசார் மற்றும் புதுக்கோட்டை ஆயூதப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.