திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது
புதுக்கோட்டை நகரில் பிரசித்திபெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் மாசிப் பெருந்திருவிழா நகரின் மிகப்பெரிய திருவிழா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது வீதி எங்கும் அலங்காரம் அன்னதானம் ஒலிபெருக்கியில் அம்மன் பக்தி பாடல்கள் நீர் மோர் பந்தல் என தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன
ஊரடங்கு காலகட்டத்திற்குப் பிறகு இந்த ஆண்டு சிறப்பான முறையில் நடைபெற்றது புதுக்கோட்டை நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அதிக எண்ணிக்கையில் உறவினர்கள் திரண்டு வருகை தந்துள்ளனர்
புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. குளிர்ந்தக்காற்றும் மழைச்சாரளுடன். பக்தர்கள் மகிழ்ச்சி பொங்க திருவப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் தரிசித்தனர்.
புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற திருவப்பூர்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்தும், பக்தர்களின் நம்பிக்கையை வீண்போகாமல் காத்தருளும் சக்தி வாய்ந்த அம்மனாகவும், எல்லோராலும் மகமாயி என அழைக்கப்படும் அம்மனாக திகழ்ந்து வருகிறார். இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அது போல் நிகழாண்டில் பூச்சொரிதல் விழாவும் அதனைத் தொடர்ந்து கொடியேற்றப்பட்டு மாசிப்பெருந்திருவிழா தொடங்கியது.
திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் அன்னவாகனம், ரிஷபவாகனம், சிம்மவாகனம், குதிரை வாகனம், முத்துபல்லக்கு போன்ற வாகனங்களில் அம்மன் திருவீதி உலா காட்சியும் நடைபெற்றது.
விழாவி்ன் முக்கிய நிகழ்வாக இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலெக்டர் கவிதாராமு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா,எஸ்.பி.நிஷா பார்த்திபன், நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. குளிர்ந்தக்காற்றும் மழைச்சாரளுடன் பக்தர்கள் மகிழ்ச்சி பொங்க திருவப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் தரிசித்தனர்.
மொத்தத்தில் வீதி எங்கும் விழாக்கோலம் பூண்டுள்ளது