திருட்டு நகைகள் மீட்பு: புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை

573

பொன்னமராவதி உட்கோட்ட பகுதியில் திருட்டு போன தங்க நகைகளை மீட்டு குற்றவாளிகளை பிடித்த தனிப்படை காவலர்களை நேரில் அழைத்து பாராட்டினார் போலீஸ் எஸ்பி வந்திதா பாண்டே..

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உட்கோட்ட பகுதியில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட கும்பலை மடக்கி பிடித்து 41 சவரன் தங்க நகைகளை கைப்பற்றி தனிப்படை போலீஸ்சாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பாராட்டு தெரிவிப்பு.புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் பொன்னமராவதி உட்கோட்ட தனிப்படையினர் காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் நமணசமுத்திரம் செட்டியார் தெருவில் உள்ள ராஜேந்திரன் என்பவர் வீட்டில் கடந்த 17.09,23-ம் தேதி நகை திருடு போன வழக்கு மற்றும் கடந்த 29.06.23-ம் தேதி கீழாநெல்லிகோட்டை அரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் நகை காணாமல் போன வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான கார்த்திக் (29) த/பெ சிதம்பரம் மலையலிங்கபுரம். நச்சாந்துபட்டி அஞ்சல், திருமயம் தாலுகா, புதுக்கோட்டை என்பவரை அதிரடியாக கைது செய்து அவரிடமிருந்து 41 சவரன் நகைகள் கைப்பற்றியும் எதிரி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தபட்டனர். மேற்படி குற்றவாளியை விரைவாக பிடிக்க உதவியாக இருந்த தனிப்படையினரை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இகாப., அவர்கள் நேரடியாக அழைத்து வெகுவாக பாராட்டினார்.