திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை பணிகள்.

582

இந்த பணிகள் மூன்று கட்டமாக நடந்து வருகிறது. இதில் இரண்டு கட்டமாக உள்ள கல்லகம் – மீன்சுருட்டி பிரிவில் நடந்து வரும் பணியில் ஜெயங்கொண்டம் – குறுக்கு ரோடு ( ஜெயங்கொண்டம்) வரை நடந்து வரும் பணிகள் பற்றி பார்ப்போம்.


இந்த பிரிவில் பணிகள், சில வேலைகள் தவிர்த்து மீதம் உள்ள வேலைகள் முடிந்து விட்டது. ஜெயங்கொண்டம் நகருக்கு புறவழி சாலை ஒன்று வருகிறது. அந்த புறவழி சாலைக்கு அணுகு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.மேலும் புதுசாவடி மற்றும் குருவாலப்பர் கோவில் ஆகிய இடங்களில் அந்த பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் சர்வீஸ் சாலை அமைத்து உள்ளனர்.இன்னும் கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் சாலை பணிகள் அமைக்கப்படவில்லை. அங்குள்ள பொது மக்கள் அந்த பகுதிக்கு புறவழி சாலை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருவதால். அந்த பகுதியில் பணிகள் நடக்கவில்லை.இன்னும் ஜெயங்கொண்டம் மக்களுக்கு மீதம் உள்ளது கும்பகோணம் – மதனத்தூர் – விருத்தாச்சலம் சாலை தான். அதுவும் மேம்படுத்தப்பட்டு விட்டால் இந்த பகுதி போக்குவரத்தில் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக உருமாறும்.