மாவட்ட முதன்மை சாலை எண் 720.
தாராசுரம் – திருகருக்காவூர் இடையே எந்த சாலை விரிவாக்கம் பணியும் நடக்கவில்லை. மாறாக culvert பணிகள் மட்டும் அங்கு அங்கு நடைபெற்று வருகிறது.
போக்குவரத்து அதிகம் இருந்தும் இன்னும் இந்த சாலை ஒரு வழி சாலை ஆகவே உள்ளது.
அதே போல திருகருக்காவூர் – மெலட்டூர் பேரூராட்சி வரை சாலை ஆனது இரு வழி சாலை ஆக மாற்றப்பட்டு உள்ளது.
மெலட்டூர் முதல் திட்டை இரயில்வே நிலையம் வரை அதே பழைய ஒரு வழி சாலை தான் உள்ளது.
திட்டை இரயில் நிலையம் முதல் திட்டை வரை சாலை இரு வழி சாலை ஆக மாற்றப்பட்டு உள்ளது.
அதோடு திட்டை இரயில் நிலையம் அருகில் உள்ள ரயில் சுரங்கம் மாநில அரசால் இரயில்வே மேம்பாலம் ஆக மாற்ற திட்டமிடப்பட்டு இரயில்வே பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த சாலையை மாநில நெடுஞ்சாலை ஆக மாற்றினால் சிறப்பாக இருக்கும். பட்டீஸ்வரம், ஆவூர், கோவிந்தகுடி உள்ளிட்ட போக்குவரத்து அதிகம் நடைபெறும் இடமும், அது போல ஆன்மிக தளம் அதிகம் இருப்பதால் ஆன்மிக பயணத்துக்கு சுற்றுலா வருவோரும் அதிகம் இருப்பதால் தாராளமாக மாநில நெடுஞ்சாலை ஆக மாற்றலாம். அடுத்த பதிவில் இதன் சாத்தியக்கூறுகள் பார்க்கலாம்.