தமிழக பட்ஜெட் 2022 : முக்கிய அறிவிப்புகள் என்ன? முழு தகவல் உள்ளே..!!

811

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிடுவது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியது குறிப்பிடத்தக்கது.



தமிழக பட்ஜெட் 2022 : முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வருவாய் பற்றாக்குறை கடந்த ஓராண்டில் ரூ.7ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் மாநில மொத்த உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4.61%லிருந்து 3.80 ஆக குறையும்
வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டில் 7 ஆயிரம் கோடிக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறை முடிவுக்கு வந்தபின் 20 ஆயிரம் கோடி வரி இழப்பை தமிழ்நாடு சந்திக்கும்.
பெரியாரின் சிந்தனைகளை 21 மொழிகளில் வெளியிட ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிப்பு.
தமிழ் மொழிக்கும் பிற சர்வதேச மொழிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராய குழு அமைக்கப்படும். அதற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசுப்பள்ளி அல்லாத பள்ளிகளில் 1-10ஆம் வகுப்பு தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.


விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடியில் தொல்பொருட்களை வைக்க அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
கொற்கையில் ரூ.5 கோடியில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு.
நீர்நிலை பாதுகாப்பு மற்றும் அரசு நிலங்களை மீட்கும் பணிகளுக்காக ரூ.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,816 கோடி நிதி ஒதுக்கீடு.
சமூக ஊடகங்களில் தவறான பிரசாரத்தை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.
சுய உதவிக் குழுக்களுக்கான கடன், விவசாயிகளுக்கான பயிர்கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக ரூ.496 கோடி ஒதுக்கீடு.
வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
இரண்டு ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழை மானிகள் அமைக்கப்படும்.
தமிழகத்திலுள்ள 64 அணைகளை புனரமைக்க ரூ.1,064 கோடி ஒதுக்கீடு.


வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு ரூ.7,338.36 கோடி ஒதுக்கீடு.
ரூ.20 கோடியில் வள்ளலார் கால்நடை பாதுகாப்பகங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு.
சென்னை அருகே தாவரவயில் பூங்கா ரூ.300கோடியில் அமைக்கப்படும்.
ஆதரவில்லாத, கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்க வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் ரூ.20கோடி செலவில் அமைக்கப்படும்.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.849 கோடி நிதி ஒதுக்கீடு.
புதிதாக 18ஆயிரம் வகுப்பறைகள் கட்ட ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீடு.
அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டம்.
தமிழகத்தில் புதிதாக 7 வணிக நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு.
அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படும்.
நீதி நிர்வாகத் துறைக்காக நிதிநிலை அறிக்கையில், ரூ.1.461.97 கோடி ஒதுக்கீடு.
ஆண்டுக்கு 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்த ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கீடு.
புத்தக வாசிப்பை ஊக்குவிக்க அனைத்து மாவட்டங்களிலும் ரூ.5.6 கோடி ஒதுக்கீடு.
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு மானியமாக ரூ.7,500 கோடி நிதி ஒதுக்கீடு.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ.293.26 கோடி ஒதுக்கீடு.
ஒலிம்பிக் போட்டி பயிற்சிக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு.
ரூ.10 கோடியில் வடசென்னையில் அனைத்து விளையாட்டுகளையும் உள்ளடக்கிய விளையாட்டு வளாகம் கட்டப்படும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,547 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழக அரசின் பட்ஜெட்டில் மருத்துவத் துறைக்கு 17,901.23 கோடி ஒதுக்கீடு.
இலவச மிதிவண்டி திட்டத்திற்கு 162 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
பழமையான தர்ஹாக்கள் மற்றும் தேவாலயங்களை புனரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு.
நீர் மேலாண்மைக்காக ரூ.3,384 கோடி நிதி ஒதுக்கீடு.
முதற்கட்டமாக 149 சமத்துவபுரங்கள் சீரமைப்படும். இதற்காக ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.2,800 கோடி நிதி ஒதுக்கீடு.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்துக்கு மானியமாக ரூ.1,620 கோடி ஒதுக்கீடு.
இல்லம் தேடி கல்வித்திட்டம் இந்த ஆண்டும் ரூ.200 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் ரூ.13 ஆயிரம் கோடி இழப்பை அரசே ஏற்கிறது என அறிவிப்பு.
கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தப்படும்.
6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் இடைநிற்றலை தடுக்கும் வகையில் மாதம் ரூ.1,000 வழங்கப்படும். ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வரும் மாணவிகளும் இந்த உதவித்தொகையை பெறலாம் என அறிவிப்பு.