ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து

1354

தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஞாயிறு லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இன்று தமிழ்நாடு முழுக்க அத்தியாவசியம் இல்லாத அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது பேருந்து போக்குவரத்து சேவை இன்று இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினார்.

கொரோனா தொற்று எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாக இருந்தது. கேஸ்கள் வேகமாக உயர்ந்தது. அதனால்தான் ஞாயிறுகளில் முழு லாக்டவுன் போட்டோம். ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கேஸ்கள் குறையும் அறிகுறி தெரிகிறது. அது மனநிறைவாக இருக்கிறது.


தமிழ்நாட்டில் கொரோனா குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது. கொரோனா தொற்றுக்கு முற்று ஏற்படும் போது மொத்தமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பெங்களூர், மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் இந்த மாத இறுதியோடு பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டிலும் கேஸ்கள் குறைந்தால் தளர்வுகள் வரும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.