ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு

714

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். இதன் காரணமாக கடந்த ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் இவ்வழக்கில் இருந்து தாமாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகினார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க தற்போது நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்

மூன்று தரப்பு விசாரணை முடிந்த பிறகு தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பு தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் ஜூலை 11அன்று நடந்த பொதுக்குழு செல்லாது என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும் எனவும் வழங்கப்பட்டுள்ளது உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதே சமயம் ஒருங்கினைப்பாளர், இனை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அத்துடன் பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு வேண்டும் என்றும் இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை செல்லாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

*அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை*

*அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், மக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக் கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்திருக்கிறது.*

*கழகத்தின் கசந்த* *காலங்கள்,*
*இனி வசந்த காலங்களாக மாறும்..*