ஜனாதிபதி தேர்தல்

896

ஜனாதிபதி தேர்தல் ஆனது மாநிலங்களவை, மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்ட மன்ற உறுப்பினர் வாக்கு அளித்து தேர்ந்தெடுக்கும் முறை தான் இது வரை நடந்து வருகிறது.

இதில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப அவரின் 1 வோட்டுக்கு குறிப்பிட்ட வாக்கு மதிப்பு வழங்கப்படும்.

இந்த வாக்கு மதிப்பு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரே அளவில் இருக்கும். மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப சட்ட மன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு மாறுபடும்.

இந்த வாக்கு மதிப்பு அளிப்பதற்கு இன்னும் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் பின்பற்றப்படுகிறது. இதை வைத்து தான் 1976 மற்றும் 2008 தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப சட்ட மன்ற உறுப்பினர் வாக்கு மதிப்பு உயரும்.

தமிழகத்தில் ஒரு சட்ட மன்ற உறுப்பினர் வாக்கு மதிப்பு 176 ஆக தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இது சில மாநிலங்களுக்கு குறைவாகவும் சில மாநிலங்களில் அதிகமாகவும் இருக்கும், அதற்கு மக்கள் தொகை தான் காரணம்.

இதே போல வெவ்வேறு மாநிலங்களில் இருந்து தீர்மானிக்கப்பட்ட வாக்கு மதிப்பின் மொத்தம் 5,49,495. இதில் தமிழகத்தின் பங்கு 41,184.

பலருக்கு மக்கள் தொகை ரீதியாக தீர்மானிக்கப்பட்டு வாக்கு மதிப்பு முடிவு செய்யப்பட்டாலும் இந்த 176 எப்படி வந்தது எப்படி என்று குழப்பம் ஆக இருக்கும்.

1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியா மக்கள் தொகை 54.79 கோடி ஆகும். இதில் தமிழக மக்கள் தொகை 4.11 கோடி. 1971 ஆம் ஆண்டு இந்தியா மக்கள் தொகையில் தமிழகத்தின் பங்கு 7.5% ஆகும்.

இந்த சதவிகிதம் வரும் அளவுக்கு தான் தமிழகத்தில் வாக்கு மதிப்பு தீர்மானிக்கப்படும்.

இந்த ஜனாதிபதி தேர்தலில் அனைத்து மாநிலங்களில் உள்ள சட்ட மன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,49,495. இதில் தமிழகத்தில் 41,184 வாக்கு உள்ளது. அதாவது அதே 7.5% மதிப்புக்கு நெருக்கமான 7.49% ஆகும்.

அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு. இது மிகவும் எளிது. இந்தியாவில் உள்ள மொத்த தேர்ந்து எடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 776 ஆகும்,நியமன உறுப்பினர்கள் தவிர்த்து. இதில் மக்களவை 543 உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை 233 ஆகும்.

அனைத்து மாநில வாக்கு மதிப்பான 5,49,495 யை மொத்த உறுப்பினர் எண்ணிக்கை மூலம் வகுத்து கிடைப்பது தான் அந்த MP வாக்கு மதிப்பு, அந்த மதிப்பு 708 ஆகும். தசம மதிப்பு கிடைத்தாலும், முழு மதிப்பே எடுத்துகொள்ள படுகிறது.

ஆக மொத்தம் 776 பேர் மூலம் கிடைக்கும் மொத்த வாக்கு
776*708 = 5,49,408

சட்ட மன்ற உறுப்பினர் மூலம் கிடைக்கும் மொத்த வாக்கு: 5,49,495.

மொத்த வாக்குகள்: 10,98,903. இதில் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கிறதோ அந்த தரப்பு வெற்றி அடையும்

(தவறுகள் இருந்தால் குறிப்பிடவும்.)