கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

1075

கொன்னையூர் முத்துமாரியம்மன் பொன்னமராவதி ஒன்றியத்தில் மிகவும் பிரசித்த்து பெற்ற கோயிலாக கொன்னையூர்முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.

இக்கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குபவளும் வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளிப்பவளும், நாடி வந்தோரின் குறைகளை போக்குபவளுமான கொன்னையூர் அன்னை முத்துமாரியம்மனின் பங் பெருந்திருவிழா வருடம் தோறும் பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் தினசரி இரவில் அம்பாள் திருவீதி உலாவின்போது ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் அம்பாள் முன்னிலையில் வரிசையாக இருபுறமும் நின்று தீப்பந்தம் பிடிப்பர். ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியடைகிறார்கள். இருள் நீங்கி நமது

பூச்சொரிதல் விழாவுடன் துவங்கி நடந்து வருகிறது. இந்த விழாவில் அக்னி பால்குட விழா, காப்புக்கட்டுதல் விழா, மண்டகப்படி விழாக்கள் என நடைபெறும். இந்த விழாவில் மண்டகப்படி

இது திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் ஆகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நீங்கி சுகம் பெறுகிறார்கள். குடும்பத்தில்

வாழ்வில் ஒளி பிறக்கிறது என்பது கிராம மக்களின் நம்பிக்கையாய் உள்ளது. இதனால் திருவிழாவில் அம்பாள் வீதி உலாவின்போது

ஆயிரக்கணக்கனோர் தீப்பந்தம் பிடிப்பதை இன்றும் காணலாம். மேலும், ஒவ்வொரு ஆண்டும் தீப்பந்தம் பிடிப்பவரின் வேண்டுதலை நிறைவேற்றுபவரின் எண்ணிக்கை அதிகரித்தும்

முத்துமாரி அம்மனை அமாவசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்ச பலன்

வருகிறது.இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் நிவர்த்தியாகும். மாவிளக்கு வைத்து வழிபாடு செய்தல், அழகு குத்துதல், அடி அளந்து கும்பிடுதல்,

முடி காணிக்கை செலுத்துதல் போன்ற வழிபாடுகள் செய்தால் தங்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

பங்குனி திருவிழாவின் முக்கிய திருவிழாவாக நாடு செலுத்துதல் விழாவில் பொன்னமராவதி நாடு, செவலூர் நாடு, ஆலவயல் நாடு, செம்பூதி நாடு ஆகிய நான்கு நாடுகள் செலுத்தும் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் கம்புகள், வேல், ஈட்டி போன்ற ஆயுதங்களுடன், உடலில் சகதி பூசி வருதல் இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக திகழும். இந்த கோயிலில் ரூ.1,500 கட்டணம் செலுத்தி வெள்ளி ரதம் இழுக்கலாம், தினசரி அரசு சார்பில் கோயிலில் அன்னதானம் வழங்கப்படுகின்றது. இந்த கோயிலுக்கு புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். இந்த ஆண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை 20ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் பங்குனித் திருவிழா தொடங்குகிறது

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் தலவரலாறு !

மூலவர் : மாரியம்மன்

தல விருட்சம் : நெல்லிமரம்

பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர் : கொன்னையூர்

மாவட்டம் : புதுக்கோட்டை

மாநிலம் : தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி கொன்றை மரங்களும் கற்றாழைச் செடிகளும் சூழ்ந்த வனமாகத் திகழ்ந்தது. யாதவ இனத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், அதிகாலையில் எழுந்து, பால் கறந்து, தலையில் தூக்கிச் சென்று ஊருக்குள் சென்று விற்று வருவது வழக்கம். அந்தக் கால கட்டத்தில், ஊர்மக்களை பல விசித்திரமான நோய்கள் தாக்கின; இதனால், நிலத்தில் வேலை செய்ய ஆளே இல்லாமல் போனது. விதைத்தவையெல்லாம், நீர் பாய்ச்ச ஆளின்றி, வாடின; கருகின. மழையும் தப்பிவிட… குடிப்பதற்குக்கூட தண்ணீர் கஷ்டம் எனும் அளவுக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள். மக்கள் அனைவரும் உலகாளும் நாயகியை வேண்டினர். அவர்களின் நோய்கள் யாவும் குணமாகவேண்டும்; மனமெல்லாம் குளிர்ந்து பூரிக்க வேண்டும்; பூமி செழித்து, அனைவருக்கும் வயிறார உணவு கிடைக்கவேண்டும் என யோசித்தவள், பூமிக்குள் புகுந்து கொண்டாள். பாலை எடுத்துக்கொண்டு, வழக்கம்போல் அந்தப் பெரியவர் வரும்போது, கொன்றை மரத்தின் வேர்களில் அவரது கால்கள் பட, தடுமாறினார். பால் மொத்தமும் கொட்டியது. மண்ணெல்லாம் பாலாயிற்று. எத்தனை கவனமாக நடந்துபோனாலும், இப்படித் தடுமாறுவதும், பால் கீழே மண்ணில் கொட்டி வீணாவதும் தினமும் தொடர்ந்தது. பெரியவர் கவலையானார். ஒருநாள், கோடரியால் அந்தக் கொன்றை மரத்தின் வேரை வெட்டினார். அங்கிருந்து குபுக்கென்று ரத்தமும் பாலுமாக வெளிப்பட, அதிர்ந்துபோனார் பெரியவர். விஷயம் தெரிந்து, ஊரே கூடியது. இன்னும் இன்னும் தோண்டிப் பார்க்க…. அழகிய விக்கிரகத் திருமேனியில் வெளிப்பட்டாள், தேவி ! பள்ளத்தில் இருந்து வெளியே எடுத்து, மேடான பகுதியில் வைத்ததுதான் தாமதம்… உடலையே துளைத்தெடுப்பது போல் பெய்தது, கன மழை ! கிணறுகளும் குளங்களும் ஊரணிகளும் நிரம்பின; பிறகு வரப்பு வழியே, வாய்க்கால் வழியே வயல்களுக்குச் சென்று, விதைகளைக் குளிரச் செய்தன. தேகத்தைத் துளைத்த மழையால், மக்களின் தோல் நோய்கள் யாவும் நீங்கின.

அதிசயத்தின் அடிப்படையில்: குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள நெல்லிமரத்தில் தொட்டில் கட்டி வழிபடுவது சிறப்பு.

பங்குனித் திருவிழா இன்று தொடக்கம்

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான விழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்குகிறது. 21 ஆம் தேதி திங்கள்கிழமை அக்கினிக்காவடி எடுக்கும் விழாவும், 22 ஆம் தேதி காப்புக்கட்டப்பட்டு 27 ஆம் தேதியிலிருந்து ஏப். 11 ஆம் தேதி வரை மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உள்ளிட்ட சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. ஏப். 10,11,12ஆம் தேதி பொங்கல் விழாவும், 11 ஆம் தேதி நாடு வருகை புரியும் விழா நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் என். சந்திரசேகரன், உதவி ஆணையர் நா.சுரேஷ், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துகழகம் சார்பில் காரைக்குடி, திருப்பத்தூர், பொன்னமராவதி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஓம்சக்தி ! பராசக்தி !

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் பூத்திருவிழாவிற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களையும் வருக வருக என அன்போடு வரவேற்கின்றோம்..