கைவிடப்பட்டது ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையம்

446

ஜெயங்கொண்டம் நிலக்கரி சுரங்கம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மீண்டும் ஒப்படைப்பு.

இதன் மூலம் பல நாள் பேசு பொருள் ஆக இருந்து வந்த ஜெயங்கொண்டம் அனல்மின் நிலையம் முடிவுக்கு வருகிறது.

அதோடு பல நாள் திட்டம் ஆக உள்ள கும்பகோணம் – ஜெயங்கொண்டம் – விருத்தாச்சலம் இரயில்வே பாதை கிட்ட தட்ட முடிவுக்கு வந்த மாதிரி தான். சில அமைப்புகள் மட்டும் இன்னும் முயற்சி செய்து கொண்டு உள்ளனர்.

கைவிட பட்டதுக்கு பல காரணம் ஆக இருந்தாலும் முதல் காரணமாக பார்க்கப்படுவது செலவு தான், சுரங்கம் மூலம் எடுக்கப்படும் நிலக்கரியை விட வெளிநாடுகளில் இறக்குமதி செய்யும் நிலக்கரி விலை குறைவு.இந்த திட்டம் பதில் ஆண்டிமடம் தாலுகா பகுதியில் ஒரு சிப்காட் அமைக்கலாம். இடம் வசதி ஆண்டிமடம் தாலுகாவில் அதிகம் இருக்கும்.

போக்குவரத்து ரீதியாகவும் நல்ல கட்டமைப்பு பெற்றுள்ளது
திருச்சி, அரியலூர், கும்பகோணம், சிதம்பரம், விருத்தாச்சலம், சென்னை போன்ற பகுதிகள் உடன் நல்ல இணைப்பை பெற்றுள்ளது.

சிப்காட் அமைத்தாலும் வெற்றிகரமான முறையில் இயங்கும். ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார மக்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.