அடிமை ஆகாதே புகை குடிப்பழக்கத்துக்கு!!!

797

ஒரு ஆணிற்கு “சாராயம்”தான் வாழ்க்கை எனில் அவன் மூன்று விசியங்களுக்கு முக்கியமில்லாதவனாக மாறிவிடுகிறான்!

1, அன்பான மனைவியை ரசிக்க தெரியாத குருடனாக?

2, அழகான குழந்தைகளின்
பாசத்தை உணர முடியாத முரடனாக!

3, இச்சமுகத்தில் வாழ தகுதியற்ற மனிதனாக!

மதுவிற்கு ஏன் “குடி” என்று பெயர் வந்தது தெரியுமா?
மது மட்டுமே வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும். சேர்த்து குடிப்பதால்…

1
*மனைவியை ரசிக்க தெரியாத குருடனாக…

போதையின் மயக்கத்தில், தன்னை நம்பி வாழ வந்தவளை, எந்தவொரு உறுதி மொழி ஏற்று கரம் பிடித்தானோ அதை கைக்கழுவி விட்டு, தன்னுடைய சுகத்திற்காக மட்டுமே வாழ தொடங்கிவிடுகிறான், அதன் விளைவாய் (சில பெண்கள்) கட்டியவனை வெறுத்து ஒதுக்கி வேறொருவரின் உதவியை நாடுகிறார்கள், இங்கு அடுத்தவன் மனைவிக்கு ஆசைபடாத ராமன் இன்னும் பிறக்கவில்லை… இறுதியில் தன் மனைவிக்கு மனசு மற்றும்&😭. உடல் சுகத்தை கொடுக்க முடியாத ஏமாளி கணவனாகிவிடுகிறான்,

2
*அழகான குழந்தைகளின் பாசத்தை உணர முடியாத முரடனாக…

மதுவிற்கு அடிமையானவன் தன் குழந்தைகளிடம் பேசுவதில்லை, குழந்தைகளிடம் பேசி, அவர்கள் பேசுவதை கேட்டால்தான் இச்சமூகத்தில் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது புரியவரும், இல்லையேல் “குடிகாரன் பெத்த பிள்ளைதானே” என்று ஏசக்கூடும்,

3
*இச்சமூகத்தில் வாழ தகுதியற்ற மனிதனாக…

இறுதியில் ஒழுக்கம் கெட்டு அவன் மதிப்பை அவன் இழந்துவிடுகிறான், வாழவேண்டிய வயதில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு, வீட்டிலும் வெளியிலும் மரியாதை இல்லாமல், அவன் பேச்சை யாரும் கேட்பதுமில்லை, மதிப்பதுமில்லை,

மது அவன் ‌உழைப்பையும், உயிரையும், சிறுக சிறுக குடிக்கிறது… ஆனால்? தண்டனையோ… அவன் மனைவியை யாசியாக்கும், சிலரை வேசியாக்கும், அல்லது விதவையாக்கும்… இவனுக்கு கிடைக்கும் மரியாதைதான் இவன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்,

குடி தான் உன் வாழ்க்கை என்றால்?

உனக்கு திருமணம் எதற்க்கு?
மனைவி எதற்க்கு?
குழந்தைகள் எதற்க்கு?

உன்னை திருத்தி நல்வழிப்படுத்தி… எல்லாவற்றையும் சகித்து உன்னுடன் வாழவேண்டும் என்ற கட்டாயத்தில் உன் குடும்பம் இருக்கிறது, தற்போதைய காலகட்டத்தில் இப்படியொரு குடும்பம் கிடைப்பது மிகமிக அரிது…

காரணம் இச்சமூகம்…

அவர்களின் ஒவ்வொரு சொட்டு கண்ணீற்கும் எதிர் வினை உண்டு…

இறுதியில் நீ அவர்களிடமே சென்று தஞ்சமடைவாய்…
காலம் கண்டிப்பாக அதை உனக்கு உணர்த்திவிடும்.

குடிப்பழக்கம் நம் கலாசாரத்தோடு இணைந்த ஒரு செயலாகிவிட்டது. கெடாவெட்டு, கோயில் திருவிழா, கல்யாணம்… என எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும், ஏன்… மரணம் நிகழ்ந்த வீடாக இருந்தாலும்கூட குடி என்பது தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகிவிட்டது. சாலையோர டாஸ்மாக் கடைகளை உச்ச நீதிமன்றம் அகற்றச் சொன்னாலும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வந்தாலும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தினாலும் முழு மதுவிலக்கு என்பது இன்றைய நிலையில் சாத்தியமில்லாததாகவே இருக்கிறது. அதற்குக் காரணம் மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் அதிகமாகியிருப்பதுதான். விடுமுறை நாளில்கூட கள்ள மார்க்கெட்டில் குவார்ட்டர் பாட்டில்கள் எங்கே கிடைக்கும் என அறிந்துவைத்திருக்கிறார்கள் மதுப் பிரியர்கள். `குடிப்பழக்கம் கூடாது’ என சம்பந்தப்பட்டவரே முடிவெடுத்தால் தவிர, இந்தப் பழக்கத்திலிருந்து தப்பிக்க வேறு வழியில்லை. 

சில ஆண்டுகளாக தொடர்ந்து குடித்துவருகிறார் ஒருவர். அவரின் குடிப்பழக்கத்தை உடனே நிறுத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. `இதை நிறுத்தியே ஆக வேண்டும்’ என்பதை ஒரு லட்சியமாகவே நினைத்துக்கொண்டு அவர் செயல்பட்டால்தான், குடிப்பழக்கத்திலிருந்து அவரால் விடுபட முடியும். `குடிக்க மாட்டேன்’ என்கிற தீர்க்கமான முடிவுக்கு அவர் வந்துவிட்டார் என்றால், இந்தப் பழக்கத்தை நிறுத்தும் போராட்டத்தில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதம் அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்று அர்த்தம். இதுதான் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முதல் படி, முக்கியமான வழி. 

நீங்கள் மிக மோசமாக மதுப் பழக்கத்துக்கு ஆளாகியிருக்கலாம்; அதிலிருந்து மீள முடியாத அளவுக்கு மன பலவீனம் உள்ளவராக இருக்கலாம். அதை விட்டுவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டீர்களா? நல்லது; அது போதும். அதற்காக நாள், நட்சத்திரம் எல்லாம் பார்க்க வேண்டாம். இன்றைக்கே அந்த முடிவை அமல்படுத்த ஆரம்பித்துவிடுங்கள். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட வெளியாட்கள் யாரும் உதவ மாட்டார்கள். தனிப்பட்ட முறையில் உங்களை நீங்களேதான் அதற்குத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்; விடுபடுவதற்கான அத்தனை வழிமுறைகளையும் கையாள வேண்டும். மறந்துவிடாதீர்கள்… இதற்கு நீங்கள்தான் பொறுப்பு. 

வாழ்க்கை முறையில் மாற்றம், வாழ்க்கையில் உங்களை முன்னேற்றிக்கொள்ள உதவும் நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்வதுதான் குடிப்பழக்கம் மறக்க உதவும் வழிகள்.

நன்றி வாழ்க நலமுடன் வளமுடன் 🐘