புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 26.01.2022 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறாது.
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
குடியரசு தினமான 26.01.2022-ஆம் தேதியன்று நடைபெறும் கிராம சபைக்கூட்டம், கொரோனா பெருந்தொற்று காரணமாக நடத்தப்பட வேண்டாம் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து PHOUKK கிராம ஊராட்சிகளிலும், 26.01.2022 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு – செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை.