பொதுவாக சரக்கு ரயில்களின் எண்ணிக்கை பொருத்தும் வேறு ஒரு பாதையின் நெருக்கடியை குறைக்கவுமே ஒரு புதிய இரயில் பாதை அமைக்கபடுவதாக கூறப்படுகிறது. கடந்த 2014-15 ஆம் ஆண்டு நில அளவை பணிகள் முடிந்து 2016 ஆம் ஆண்டு இரயில்வே வாரியத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட புதுக்கோட்டை – தஞ்சாவூர் (65கிமீ) வழி கந்தர்வகோட்டை புதிய ரயில் பாதை
திட்டம் ‘Negative ROR’ என்றே அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2018-19 ஆண்டு வெளியான பிங்க் புத்தகத்திலிருந்து இந்த திட்டம் வெளியேறியது.

ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் சாலை விரிவாக்கம் போன்ற பல காரணங்களால் மதுரை – புதுகை – தஞ்சை சாலை மார்க்கதில் போக்குவரத்து அசூர வேகத்தில் அதிகிரித்துள்ளது. மேலும் சாலைகளை விரிவாக்கம் செய்ய மத்திய – மாநில அரசுகள் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மன்னார்குடி போன்ற பகுதிகளிலிருந்து நெல் மூட்டைகள் கொண்ட சரக்கு ரயில்கள் திருச்சி வழியாக புதுகைக்கு ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு நெல் அரவை செய்யப்பட்டு புதுக்கோட்டை சரக்கு முனையத்திலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மேற்கண்ட சரக்கு ரயில் திருச்சி சுற்றி வருவதால் ஒவ்வோரு நடைக்கும் 38 கிமீ க்கு கூடுதலான எரிபொருள்/மின்சாரம் வீணாகிறது. மேலும் திருச்சி சந்திப்பு ஏற்கனவே இடநெருக்கடியால் சிக்கி தவிக்கிறது. மேற்கண்ட சாத்தியகூறுகளை கருத்தில் கொண்டு தஞ்சை – புதுக்கோட்டை (65கிமீ) வழி கந்தர்வகோட்டை புதிய இரயில் பாதை திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் மறுநில அளவை பணிகளுக்கு இரயில்வே நிர்வாகம் உடனடியாக உத்தரவிடவேண்டும்.
Source : Pudukkottai Railusers