கலையரங்கம் திறப்பு விழா

844

திருவரங்குளம் அருகே ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி, கும்மங்குளம் ஆதிதிராவிடர் காலனி முனீஸ்வரர் கோவில் அருகில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.6.00 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக

திருவரங்குளம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்.

கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்….

பின்னர் அமைச்சர் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.2.40 லட்சம் வீதம் என மொத்தம் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கிராமப்புறங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.