கறம்பக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

695

கறம்பக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (கிராமியம்) ஆறுமுகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கறம்பக்குடி,ரெகுநாதபுரம், நெடுவாசல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கறம்பக்குடி நகர், அம்புக்கோவில், தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு, திருவோணம், மைலன்கோன்பட்டி, மருதன்கோன்விடுதி,பந்துவர் கோட்டை, கே.கே.பட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, செங்கமேடு, காடாம்பட்டி, ஒடப்பவிடுதி, பல்லவராயன் பத்தை, திருமணஞ்சேரி, பட்டத்திகாடு, கரு,வடதெரு, கரு. தெற்குதெரு, குரும்பிவயல், நெடுவாசல், திருமுருகபட்டினம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.