புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கொசப்பட்டி தென்சபரி அய்யப்பன் கோவில் கும்பாபிசேக விழா…
திருமயம் அருகே கொசப்பட்டியில் தென்சபரி அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கொசப்பட்டியில் கேரளாவில் அமைந்துள்ள அய்யப்பன் கோவில் வடிவில் அமைக்கப்பட்டுள்ள 18 ம்படி தென்சபரி தர்மசாஸ்தா ஆலய புனராவர்த்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து தனபூஜை,நவகிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாதரணை, கோபூஜை,லட்சுமி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. மூன்று நாட்களாக யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் குடத்தை சிவாச்சாரியார்களால் மங்கள இசையுடன் கோயில் வளாகத்தை சுற்றி தலையில் சுமந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கருடபகவான் கோயில் கலசத்தை சுற்றிவர பூஜிக்கப்பட்ட புனிதநீரை கோபுர கும்ப கலசத்தில் ஊற்றப்பட்டது. அதன்பிறகு கலசத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழாவில் காரைக்குடி, புதுக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளீர் ஆன்மீக பக்தர்களும் ராமநாதபுரம், பொள்ளாச்சி,தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் கலந்துகொண்டு அருள் பெற்றுச் சென்றனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 18 படிகளுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருமயம், பனையப்பட்டி, பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருமயம் அருகே உள்ள கொசப்பட்டியில் அமைந்துள்ள தென் சபரி ஐயப்பன் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது