உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு..

1217

இந்தியாவில் இந்தாண்டு நடைபெறும் ஐசிசி கிரிக்கெட் உலகக்க்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியானது

முதல் போட்டி இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே, அக்டோபர் 5ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது

இந்தியாவின் முதல் ஆட்டம், அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது

இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது

இந்த தொடரை இந்தியா நடத்துவதால், இந்தியா நேரடியாக இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா தவிர, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகளும் தகுதி பெற்றுள்ளன.

குரூப் ஏ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 அணிகளும் இடம் பெற்றன. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சூப்பர் சிக்ஸ் போட்டி வரும் 29 ஆம் தேதி தொடங்குகிறது.