அறந்தாங்கி அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயில் திருத்தேர் 26.07.2023 மற்றும் 27.07.2023 திருத்தேரோட்டம் அதனை முன்னிட்டு திருத்தேர் வர்ணம் பூசப்பட்ட அலங்காரப்பணிகள் துவக்கம்!
அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் திருக்கோயில் திருத்தேரின் சிறப்பு என்னவென்றால் இரண்டு நாள் தேரோட்டம். முப்பது மண்டகப்படிதாரர்களைக் கொண்டு முப்பது நாட்கள் திருவிழா! ஒன்பதாம் நாளும் பத்தாம் நாளும் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் திருத்தேர் பவனி வரும். இதில் இன்னும் சிறப்பு திருத்தேர் கோவிலை வலம் வருவதற்கு பதில் பள்ளி வாசலை வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
அறந்தாங்கி அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழா மற்றும் ஆடிப் பெருந்திருவிழா முக்கிய திருவிழா நாட்கள்:
14.07.2023 மாலை 6.00 மணிக்குமேல் 7.00 மணிக்குள் #பூச்சொரிதல்.
18.07.2023 மாலை 4.30 மணிக்குமேல் 6.30 மணிக்குள் #காப்புக்கட்டுதல்.
26.07.2023 மற்றும் 27.07.2023 #திருத்தேரோட்டம்!
26.07.2023 கோட்டை தேரடி திடலிருந்து முதல் நாள் திருத்தேர் பவனி மாலை 4.30 மணிக்கு வடம் பிடித்தல்.
27.07.2023 மாலை 5.00 மணிக்கு 2-ம் நாள் தேர் புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் நிலையடி சேர்தல்.
15.08.2023 தெப்பத்திருநாள் இரவு 7.00 மணிமுதல் 8.00 மணிக்குள் அம்பாள் தெப்பத்திற்கு எழுந்தருளல்.